இன்று தீபாவளி,
பட்டாசு வெடிக்கும் குழந்தைகள், புது துணிமணிகளுடன் குடும்பம்,
ஆனந்தம், உற்சாகம்,சந்தோஷம் என பல ரூபங்களில் இத்திருநாள்,
வண்ணங்கள் மட்டுமே எங்கும் திரளாய் மக்களிடையே,
நடிகர் நடிகைகளின் படங்கள் மிக அழகாய்,
பார்க்க பார்க்க ரசிக்கும் பல வித நிகழ்வுகள்,
இவை அனைத்தையும் ஆனந்தத்துடன் காண்கிறாள்,
பட்டாசு தொழிற்சாலையின் நடுவில் அமர்ந்து தான் சேமித்த பட்டாசு அட்டைபெட்டி சீட்டுகளின்(sticker Labels) வாயிலாக,
- ஒரு குழந்தை தொழிலாளின் தீபாவளி.
" புகையில்லா தீபாவளியை கொண்டாடுவோம்..நாம் அதற்காய் செலவிட வைத்திருக்கும் தொகையை அச்சிறுவர்களுக்கு வாழ்வு அமைய கொடுதுதவுவோம் !! "

No comments:
Post a Comment