பார்க்க பல முகங்கள் இருந்தும், பாச உணர்வில்லை..
பேச பலர் வந்தும், கேட்க மனமில்லை..
உண்ண நல்ல உணவு கிடைத்தும், நாவில் சுவையில்லை..
ஒரு பள்ளி வகுப்பை போல் எங்கும் ஒரே வயதினர்..
வாழ்கை என்னும் வகுப்பில் இறப்பு என்னும் இறுதி தேர்வை,
நோக்கி காத்திருக்கும் தெய்வ குழந்தைகளின் உள்ளங்கள்..
பெற்ற பிள்ளைகளால் பெருகி வரும் முதியோர் இல்லங்கள் !

No comments:
Post a Comment