Friday, 18 May 2012

Change !!




Change is not Just the thing to see it in a weird manner in any circumstances,its an external attribute that influence a Change in our internal attributes(whoof..a philosophical lecture to start with...probably i have used it for the whole too :P !! ).People's view over a Change has been narrowed to a channel of fear and anxiety.Its just because we think that being common is safe and secured rather than facing a Change which i feel is a mere ignorance!!.I just want to share my view on "Change" which may be useful for some.

Change is just like a sign board in ur path,if u keenly observe it u can find the meaning in it which will b helpful for ur next step !!

Change is nothing but a opportunity to grow if u see it as a key to ur doorway of ur next dimension !! 

Change is a platform to prove urself and makes u as a creator of ur own magical notes !!.

Change can be like a situation as u r in a stranded island,but remember u r d king of tat island !!.

Change can be felt oly when u implement it , not by foreseeing it !!

Hope u just got a glimpse of Change from my point of view and also it would have Changed the view over a Change ! :) ;)

Change is a Daily basis function which is observed by many but adapted and utilised by a few !! So better adapt to it rather than feeling for it !

 Just Face the Change and Be a Change,as Change is always Permanent !! :)

இதுவும் ஒரு தீபாவளிதான் !!





இன்று தீபாவளி,
பட்டாசு வெடிக்கும் குழந்தைகள், புது துணிமணிகளுடன் குடும்பம்,
ஆனந்தம், உற்சாகம்,சந்தோஷம் என பல ரூபங்களில் இத்திருநாள்,
வண்ணங்கள் மட்டுமே எங்கும் திரளாய் மக்களிடையே,
நடிகர் நடிகைகளின் படங்கள் மிக அழகாய்,
பார்க்க பார்க்க ரசிக்கும் பல வித நிகழ்வுகள்,
இவை அனைத்தையும் ஆனந்தத்துடன் காண்கிறாள்,
பட்டாசு தொழிற்சாலையின் நடுவில் அமர்ந்து தான் சேமித்த பட்டாசு அட்டைபெட்டி சீட்டுகளின்(sticker Labels) வாயிலாக,
ஒரு குழந்தை தொழிலாளின் தீபாவளி.

புகையில்லா தீபாவளியை கொண்டாடுவோம்..நாம் அதற்காய் செலவிட வைத்திருக்கும் தொகையை அச்சிறுவர்களுக்கு வாழ்வு அமைய கொடுதுதவுவோம் !! "

காதலின் நிழலும் கருப்பு




பாசமுடன் அரவணைக்கும் அன்னை,
நம்பிக்கையை ஊட்டும் தந்தை,
கைமாறு கருதாது உதவும் நண்பர்கள்,
இவை அனைத்தையும் தருபவள் அவள் என்று காதலித்தேன்,
சற்று சறுக்கியது அப்பாதை,விழுந்தேன் பாதாளத்தில்,
நண்பர்கள் உதவ..அன்னையும் தந்தையும் என்னை தாங்கி பிடிக்க,
நிமிருந்து பார்த்தேன்..அவளை காணவில்லை..
என் நிலையை உணர்ந்து திரும்பி பார்த்தேன்..
பாதாளத்தில் ஆண்கள் பெண்கள் என பலபேர் – மீள முடியாமல் !!


காதலிப்பது குற்றமில்லை..அதை காரணமின்றி கலைப்பது குற்றமே !!

முதியோர் இல்லம் !!




பார்க்க பல முகங்கள் இருந்தும், பாச உணர்வில்லை..
பேச பலர் வந்தும், கேட்க மனமில்லை..
உண்ண நல்ல உணவு கிடைத்தும், நாவில் சுவையில்லை..
ஒரு பள்ளி வகுப்பை போல் எங்கும் ஒரே வயதினர்..
வாழ்கை என்னும் வகுப்பில் இறப்பு என்னும் இறுதி தேர்வை,
நோக்கி காத்திருக்கும் தெய்வ குழந்தைகளின் உள்ளங்கள்..
பெற்ற பிள்ளைகளால் பெருகி வரும் முதியோர் இல்லங்கள் !

கண்மணிகள்


“எங்கும் ஒலிக்கும் மழலை குரல்கள்..
பொங்கும் மகிழ்ச்சி அலைகள்..
அங்குமிங்கும் ஓடும் கால்கள்..
ஆட்டமும் கொண்டாட்டமுமாய் சின்னஞ்சிறுவர்கள்..”
- என கண்ணீருடன் படிப்பதை பாதியில் நிறுத்தி எழுந்து சென்றாள்,
பார்வையற்றோர் பள்ளியில் புதிதாய் சேர்ந்த மாணவி.




பிறர் வாழ நம்மால் முடிந்ததை செய்வோம்…கண்தானமும் நம்மால் செய்ய துணிந்தது என்பதை நினைப்போம் !!